search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாத்மா காந்தி சிலை"

    நூற்றாண்டு கண்ட சென்னை தக்‌ஷிண பாரத் இந்தி பிரசார் சபாவில் நிறுவப்பட்ட மகாத்மா காந்தி சிலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார். #RamNathKovind #MahatmaGandhiStatue
    சென்னை:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒருநாள் பயணமாக தமிழகத்துக்கு இன்று வருகை தந்துள்ளார். இன்று காலை சென்னைக்கு வந்த ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர். 



    அதன்பின்னர், சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் இந்தி பிரசார் சபாவுக்கு சென்றார் ராம்நாத் கோவிந்த். நூற்றாண்டு கண்ட சென்னை தக்‌ஷிண பாரத் இந்தி பிரசார் சபாவில் நிறுவப்பட்ட மகாத்மா காந்தி சிலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

    எனக்கு பிடித்த மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டுக்கு வருவதில் மிக்க மகிழ்ச்சி. தமிழ்நாடு மிக அழகிய மொழி, செம்மையான கலாச்சாரம், திறமையுடன் கடுமையாக உழைக்கும் மக்கள், தொன்மையான வரலாறு ஆகிய சிறப்புகளை கொண்டது. காந்திஜியின் கருத்துக்கள் உலகுக்கு பொதுவானவை என குறிப்பிட்டுள்ளார். #RamNathKovind #MahatmaGandhiStatue
    தென்கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, அங்குள்ள பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள காந்தி சிலையை திறந்து வைத்தார். #ModiInSouthKorea #ModiInSeoul #ModiKoreaVisit
    சியோல்:

    இந்திய பிரதமர் மோடி தென்கொரியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு இன்று அதிகாலை தென் கொரிய தலைநகர் சியோல் போய்ச் சேர்ந்தார்.

    பிரதமர் மோடிக்கு சியோல் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மோடி தங்கி இருந்த ஓட்டலில் இந்திய வம்சாவளியினர் அவரைச் சந்தித்து வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில், சியோலில் உள்ள புகழ்பெற்ற யோக்சி பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு நிறுவப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை மோடி, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மற்றும் ஐநா சபை முன்னாள் பொதுச்செயலாளர் பான் கிமூன் ஆகியோர் திறந்து வைத்தனர்.



    நிகழ்ச்சியில் பேசிய மோடி, மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாடி வரும் வேளையில், அவரது சிலையை திறந்து வைத்தது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று குறிப்பிட்டார். மேலும், பயங்கரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய இரண்டும் மனிதகுலம் எதிர்கொண்டுள்ள இரண்டு பெரிய சவால்கள் என்றும் கூறினார்.

    மகாத்மா காந்தியின் போதனைகளை சுட்டிக்காட்டி பேசிய மோடி, உலகின் முக்கிய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு இந்த போதனைகள் உதவும் என்றார்.

    பிரதமர் மோடி தனது பயணத்தின் போது இந்திய-தென்கொரியா இடையே தொழில், வர்த்தகம் தொடர்பாக அந்நாட்டு அதிபர் மூன் ஜாயியுடன் பேச்சு நடத்துகிறார். புதிய ஒப்பந்தங்களிலும் இரு நாட்டு தலைவர்கள் கையெழுத்திடுகிறார்கள்.

    இந்த சுற்றுப் பயணத்தின் போது பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற திட்டங்களுக்காக அவருக்கு அமைதிக்கான மகாத்மா காந்தி விருது தென்கொரிய அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

    பிரதமர் மோடி தென்கொரியா செல்வது இது 2-வது முறையாகும். கடந்த 2015-ம் ஆண்டு மோடி தென்கொரியா சென்று அந்நாட்டுடன் தொழில், வர்த்தகம் தொடர்பாக பேச்சு நடத்தினார். #ModiInSouthKorea #ModiInSeoul #ModiKoreaVisit
    மத்திய அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஹவானாவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். #PresidentKovind
    ஹவானா:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கிரீஸ், சுரினாம் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று கியூபா சென்றடைந்தார். ஹவானா விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை அந்நாட்டு மந்திரி மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனர்.

    இதையடுத்து, முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்துக்கு சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அங்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்.

    அதைத்தொடர்ந்து, ஹவானாவில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவருடன் இந்திய தூதரக அதிகாரிகள் உடனிருந்தனர். மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், கியூபா அதிபரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். #RamnathKovind #Havana
    ×